முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய சுப்ரீம் கோர்ட் விலக்கு


முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய  சுப்ரீம் கோர்ட் விலக்கு
x
தினத்தந்தி 4 Feb 2019 1:37 PM IST (Updated: 4 Feb 2019 1:37 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பிப்.7-க்குள் நீதிமன்றத்தில் சரணடைய சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்து உள்ளது.

புதுடெல்லி

1998-ஆம் ஆண்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்தார்.

பிப்ரவரி 7-க்குள் சரணடைய சிறப்பு நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்றத்தில் சரணடைய சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்து உள்ளது.

Next Story