அசாம் ரெயில் நிலையங்களில் மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் பறிமுதல், விசாரணை தீவிரம்


அசாம் ரெயில் நிலையங்களில் மூட்டை மூட்டையாக வெடிபொருட்கள் பறிமுதல், விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 4 Feb 2019 2:56 PM IST (Updated: 4 Feb 2019 3:46 PM IST)
t-max-icont-min-icon

அசாம் ரெயில் நிலையங்களில் மூட்டை மூட்டையாக வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடக்கிறது.

கவுகாத்தி,

அசாம் தலைநகர் கவுகாத்தி ரெயில் நிலையத்தில் இன்று காலை பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  பிளாட்பாரத்தில் 440 ஜெலட்டின் குச்சிகள், 700 டெட்டனேட்டர்கள் மற்றும் பியூஸ் வயர் அடங்கிய மூன்று மூட்டைகள் கைப்பற்றப்பட்டது. 

இதேபோன்று ஜாகிரோடு ரெயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் வெடிபொருட்கள் காண்டெடுக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் அசாம் - அவந்த் எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனை செய்தபோது அதிலிருந்து இரண்டு  மூட்டைகளில் 160 ஜெலட்டின் குச்சிகள், 500 டெட்டனேட்டர்கள் பைகளில் 
கண்டெடுக்கப்பட்டது

சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அசாம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வெடிபொருட்களை யார் விட்டுச்சென்றுள்ளனர் என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ள போலீசார்.  ரெயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Next Story