இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு இளம் பெண் கைது


இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மற்றொரு இளம் பெண் கைது
x
தினத்தந்தி 5 Feb 2019 12:22 PM IST (Updated: 5 Feb 2019 12:22 PM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதல் முறையாக மற்றொரு இளம் பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புதுடெல்லி

டெல்லியில், 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக மற்றொரு பெண்  கைது செய்யப்பட்டுள்ளார்.

19 வயதான சிவானி என்ற இளம்பெண் தன்னுடன் தங்கியிருந்த மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போலியான உறுப்பை பொருத்தி, குறித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததையடுத்து சிவானி மீது 377 சட்டத்தின் கீழ் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சிவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story