நாடாளுமன்ற தேர்தலையொட்டி டி.ஜி.பி.க்கள் திருப்பதியில் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தென் இந்திய டி.ஜி.பி.க்கள் திருப்பதியில் ஆலோசனை நடத்தினர்.
திருப்பதி,
நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தேர்தலை அமைதியாக நடத்த ஆந்திர மாநில டி.ஜி.பி. ஆலோசனை கூட்டத்தை திருப்பதியில் நேற்று நடத்தினார். இதில் தமிழக, கர்நாடக டி.ஜி.பி.க்கள், ஆந்திர மாநில உள்துறை முதன்மை செயலாளர் மற்றும் சத்தீஷ்கார், ஒடிசா, தெலுங்கானா மாநில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தேர்தல் சுமுகமாக நடைபெற நக்சலைட்டுகளை ஒடுக்குவது, மாநில எல்லைகளில் கூடுதல் சோதனை சாவடிகளை அமைப்பது, குற்றவாளிகளின் பட்டியலை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Tags :
Next Story