மத்திய அரசு உத்தரவுப்படி அபிநந்தன் வீடியோவை ‘யூ-டியூப்’ நீக்கியது
சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கி உள்ளார்.
புதுடெல்லி,
சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கி உள்ளார். அச்சம்பவம் தொடர்பான 11 வீடியோ பதிவுகள், ‘யூ-டியூப்’ தளத்தில் வெளியிடப்பட்டன. அந்த வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பகிர்ந்ததுடன், அதுபற்றி கருத்துகளையும் பதிவிட்டனர்.
இதையடுத்து, அந்த வீடியோ பதிவுகளை நீக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, அந்த பதிவுகளை நீக்கி விட்டதாக ‘யூ-டியூப்பை நடத்தி வரும் ‘கூகுள்’ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதை மத்திய அரசு வட்டாரங்களும் உறுதிப்படுத்தின.
Related Tags :
Next Story