மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் விலை ரூ.2 உயர்வு


மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் விலை ரூ.2 உயர்வு
x
தினத்தந்தி 1 March 2019 1:38 AM IST (Updated: 1 March 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி, 

சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மானிய விலை சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2.08 உயர்த்தப்பட்டது. அதுபோல், மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.42.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

தொடர்ந்து 3 மாதங்களாக சமையல் கியாஸ் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் விலை உயர்ந்துள்ளது.

Next Story