பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிய உளவாளி கைது
பாகிஸ்தான் சிம் கார்டுடன் மொபைல் போன் வைத்திருந்த வாலிபர் ஒருவரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
பெரோசபூர்
பஞ்சாப் மாநிலம் பெரோசபூர் எல்லைப் பகுதியில் சோதனை சாவடியில் சந்தேகமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நடமாடிக்கொண்டு இருந்தார். ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தார். எல்லைபாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.
உடனே அவர் தன்னிடம் இருந்த மொபைல் போனை தூக்கி எறிந்து உள்ளார். பாதுகாப்பு படை வீரர்கள் அந்த மொபைல்போனை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அந்த மொபைல் போன் பாகிஸ்தான் சிம் கார்டுடன் இருந்தது. அதில் 8 பாகிஸ்தான் குழுக்கள் சேர்க்கப்பட்டு இருந்தது. மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் 6 மொபைல்போன் எண்கள் அதில் காணப்பட்டது.
அவரது பெயர் முகமது ஷாரிக் எனவும், உத்தரபிரதேசம் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story