லாகூரில் இருந்து அபிநந்தன் வாகா எல்லை வந்தடைகிறார்...


லாகூரில் இருந்து அபிநந்தன் வாகா எல்லை  வந்தடைகிறார்...
x
தினத்தந்தி 1 March 2019 4:41 PM IST (Updated: 1 March 2019 4:41 PM IST)
t-max-icont-min-icon

அபிநந்தன் லாகூர் வந்தடைந்தார். சற்று நேரத்தில் வாகா எல்லையில் அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார். வரவேற்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

புதுடெல்லி

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்  ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்படுகிறார்.  இந்த நிலையில்  அபிநந்தன் இன்று பிற்பகல் விடுவிக்கபடுவாரென பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி கூறி உள்ளார். வாக எல்லை வழியாக அவர் விடுவிக்கபடுவார் என கூறினார்.

அமிர்தசரஸ் துணை ஆணையாளர் சிவ் துலர் சிங் தில்லான், இந்திய விமானப்படை மூத்த குழுவினரிடம்  விங் கமாண்டர் அபிநந்தனை  ஒப்படைப்பார்கள்  என்று கூறியுள்ளார்.

அபிநந்தனை வரவேற்க இந்திய மக்கள் அங்கு குவிந்து உள்ளனர். எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் பாடல்களை படித்தபடி உள்ளனர்.  மேளங்களை இசைத்தபடியும் மற்றும் மூவர்ண கொடிகளை கைகளில் ஏந்தியபடியும் உள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் மக்கள் நாட்டுப்பற்று பாடல்களுடன், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.

இதேபோன்று சீக்கிய இளைஞர் ஒருவர் பெரிய மலர்மாலையை கையில் ஏந்தியபடி, எனக்கு அனுமதி வழங்கினால், இந்த மலர்மாலையுடன் விமானியை வரவேற்க விரும்புகிறேன் என கூறினார்.  வயது முதிர்ந்த நபர் ஒருவர் மேளம் இசைத்து கொண்டு உள்ளார்.

பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் இந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அபிநந்தன்  லாகூர் வந்தடைந்து உள்ளார். சற்று நேரத்தில் வாகா எல்லை வந்தடைகிறார். 

Next Story