அபிநந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது - இந்திய விமானப்படை அதிகாரி ஆர்.ஜி.கே.கபூர் பேட்டி
அபிநந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது என்று இந்திய விமானப்படை அதிகாரி ஆர்.ஜி.கே.கபூர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் தாயகம் வந்தார். அபிநந்தனை வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரி ஆர்.ஜி.கே.கபூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அபிநந்தன் தாயகம் திரும்பியதில் இந்திய விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது. இரு நாடுகளின் முறைப்படை விமானப்படை வீரர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வழக்கமான நடைமுறைப்படி அபிநந்தன் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார். அபிநந்தன் விமானத்தில் இருந்து வெளியேறியபோது காயம் ஏற்பட்டதா என்பது பற்றி மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாயகம் திரும்பிய நாயகன் அபிநந்தனை பொதுமக்கள், அதிகாரிகள் பலர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story