விமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார்?


விமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார்?
x
தினத்தந்தி 2 March 2019 2:08 PM IST (Updated: 2 March 2019 2:08 PM IST)
t-max-icont-min-icon

விமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

பாகிஸ்தானால் சிறைவைக்கப்பட்ட அபிநந்தன் நேற்று  மாலை வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்ட அபிநந்தனுடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி மற்றும் ராணுவ அதிகாரிகள் அபிநந்தனை எல்லைக்கு அழைத்து வந்தனர். அப்போது அபிநந்தனுடன் ஒரு பெண் அதிகாரி இருந்தார். நேற்று சமூக வலைத்தளங்களில் அபிநந்தனுடன் சேர்ந்து அந்தப் பெண்ணும் வைரல் ஆனார். அந்தப் பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் பரிஹா பக்டி. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய விவகாரங்களை கையாளும் இயக்குநர் தான் பரிஹா பக்டி.

பாகிஸ்தானிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் பரிஹா, பாகிஸ்தான் சிறைச்சாலையிலுள்ள குல்பூஷன் ஜாதவ் வழக்கை கையாளும் பிரதான பாகிஸ்தான் அதிகாரிகளில் ஒருவர். இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட குல்பூஷன் ஜாதவை, கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் அவரது தாய் மற்றும் அவரது மனைவி சந்தித்த போது பரிஹா பக்டி உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story