பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை - இந்தியா
பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கை எடுப்பதற்கு முன் பாகிஸ்தானுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பு இல்லை என்று இந்தியா கூறி உள்ளது.
புதுடெல்லி
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை வைத்திருந்தாலும் கூட, இந்தியா பாகிஸ்தானிடம் எந்த அளவிலும் எந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகம்மதுக்கு எதிரான "உடனடி மற்றும் நம்பக்கூடிய நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நம்பகமான நடவடிக்கை எடுக்கப்படும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் வாய்ப்பு இல்லை என்று சனிக்கிழமை இந்திய வட்டார ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.
கடந்த வியாழக்கிழமை பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதிகள் உட்பட அனைத்து விஷயங்களிலும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த பேச்சுவார்த்தை பிராந்தியத்திடம் சமாதானத்திற்கும் உறுதிப்பாட்டிற்கும் "ஒரே வழி" என்று கூறி இருந்தார்.
பயங்கரவாதக் குழுவுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் எந்த நடவடிக்கையும் இல்லை என இந்திய தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் "உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை" எடுக்க வேண்டும், அது உடனடியாக அதன் பிராந்தியங்களிலிருந்து செயல்படும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய எந்த குழுக்களையோ தனிநபர்களையோ உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோக்லே பாகிஸ்தான் தூதர் சோஹைல் மகமூத்திடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story