பிரபலமாகும் அபிநந்தனின் மீசை : இளைஞர்கள் வளர்க்கிறார்கள்
பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், அவரது மீசையும் பிரபலமாகி விட்டது.
புதுடெல்லி,
இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கி விட்டனர்.
சமூக வலைத்தளங்களிலும் அபிநந்தனின் மீசையை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அந்த மீசை, ஒரு ‘பிராண்ட்’ அடையாளமாக மாறி வருகிறது.
இதுகுறித்து ரமேஷ் தாஹிலியானி என்ற வாலிபர் கூறுகையில், ‘‘அபிநந்தனின் துணிச்சலை நமது நிஜ வாழ்க்கையில் கடைபிடிக்க முடியாது. ஆகவே, அவரது பிற சிறப்புகளில் ஒன்றை பின்பற்றலாம் என்ற எண்ணத்தில், அவரது மீசையை வளர்க்க முயற்சிக்கிறோம். அவரது மீசை, பெருமைக்கும், வீரதீரத்துக்கும் அடையாளமாக திகழ்கிறது’’ என்றார்.
Related Tags :
Next Story