குல்காமில் கொல்லப்பட்ட பயங்கரவாதி : புல்வாமாவில் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் திட்டம் - வீடியோ வெளியானது


குல்காமில் கொல்லப்பட்ட பயங்கரவாதி : புல்வாமாவில் நடத்தியது போல் மீண்டும் தாக்குதல் திட்டம் - வீடியோ வெளியானது
x
தினத்தந்தி 3 March 2019 4:14 AM IST (Updated: 3 March 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் கடந்த மாதம் 24–ந் தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் 3 பேர் இறந்தனர். அதில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த ரகீப் அகமது என தெரியவந்தது.

ஸ்ரீநகர்,

ரகீப் அகமது கொல்லப்படுவதற்கு முன்பு 6 நிமிடம் ஓடக்கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த வீடியோ வெளியாகும் போது நான் சொர்க்கத்தில் இருப்பேன். புல்வாமா தாக்குதல் போன்று இந்திய பாதுகாப்பு படையினர் மீது மீண்டும் ஒரு தற்கொலை படை தாக்குதல் நடத்த உள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டதால் அந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story