காஷ்மீரில் ராணுவ தளபதி ஆய்வு : விழிப்புடன் இருக்க வீரர்களுக்கு அறிவுரை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.
ஜம்மு,
கடந்த 5 நாட்களில் பாகிஸ்தான் படையினர் 51 முறை அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில் ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று காஷ்மீர் சென்று எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தற்போது நிலவும் நிலைமையை ஆய்வு செய்தார். மேலும் ஜம்முவில் உள்ள இந்திய படைவீரர்களையும் அவர் சந்தித்தார்.
அப்போது அவர், வீரர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன், விழிப்புடன் இருந்து எதிரிகள் மற்றும் தேச விரோத சக்திகளின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story