இம்ரான்கானை பாராட்டி பேசி சிக்கிய மார்கண்டேய கட்ஜு
இம்ரான்கானுக்கு ஆதரவாக பேசிய மார்கண்டேய கட்ஜுயை சமூக தளவாசிகள் வெளுத்து வாங்கினர்.
புதுடெல்லி,
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து வான்வெளித் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனையடுத்து, திருப்பித் தாக்க வந்த பாகிஸ்தானை விரட்டி அடித்தபோது, விமானப்படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், நான் பிரதமரானதும் பேச்சு நடத்த இந்திய பிரதமர் மோடியை நேரிலும் கடிதம் மூலமும் அழைத்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை விடுதலை செய்கிறோம். அமைதி ஏற்படுத்த இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன் வரவேண்டும் என்றார்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில்,
நான் முன்பு இம்ரான் கானை விமர்சித்து வந்தேன். அவரது நாடாளுமன்ற உரையைப் பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்து விட்டார். இம்ரான்கான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது, நான் அவரது ரசிகராக இருந்ததில்லை. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஒரு போலியான நாடு என நான் அழைத்தபோது ஒரு பாகிஸ்தானியர் கூட என்னை தவறாக பேசவில்லை. இம்ரான்கானை புகழ்ந்து பேசும் போது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் என்னை தவறாக விமர்சித்தனர். இப்போது யார் பக்குவப்பட்டவர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
When I called Pakistan a fake, artificial country, not a single Pakistani abused me.
— Markandey Katju (@mkatju) March 2, 2019
But when I praised Imran Khan, dozens of Indians abused me, calling me senile, traitor, mad and what not, and telling me to migrate to Pakistan.
Now who has more maturity ?
Related Tags :
Next Story