இந்தியா - பாகிஸ்தான் இடையே பேருந்து சேவை திடீர் நிறுத்தம்: பயணிகள் அவதி


இந்தியா - பாகிஸ்தான் இடையே பேருந்து சேவை திடீர்  நிறுத்தம்: பயணிகள் அவதி
x
தினத்தந்தி 4 March 2019 4:07 PM IST (Updated: 4 March 2019 4:07 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள அம்பேத்கர் போக்குவரத்து முனையத்திலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. டெல்லியிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 தினங்கள் இந்த பேருந்து இயக்கப்படுகிறது.  பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய தினங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதல், பயங்கரவாதிகள் முகாம்கள் மீதான இந்திய விமானப்படை நடவடிக்கை உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்படும் டெல்லி-லாகூர் பேருந்து சேவை ரத்து செய்யப்படுமா? என கேள்வியெழுந்தது. இதை இந்தியா மறுத்தது. தில்லி-லாகூர் பேருந்து சேவை தொடரும் என இந்தியா தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லை வழியாக பேருந்துகள் செல்ல பாதையை திறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிராபூரில் (பாகிஸ்தான்) வசிக்கும் பயணி ஒருவர் லாகூருக்கு செல்வதற்கு டிக்கெட் வாங்க சென்றார். அப்போது அவர் கூறுகையில்,  லாகூருக்கு செல்ல டிக்கெட் வாங்க சென்றேன். ஆனால் பாகிஸ்தான் அதிகாரிகள் டிக்கெட் தர மறுத்துவிட்டனர். காரணம் குறித்து கேட்ட போது அவர்கள் ஏதும் வாயை திறக்கவில்லை. அதனால்  நாங்கள் திரும்பி வர வேண்டியிருந்தது என்றார்.  டெல்லியில் இருந்து லாகூருக்கு பேருந்து இயக்காததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Next Story