இந்திய விமானப்படை தாக்குதல்: மவுனம் கலைத்தார் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்


இந்திய விமானப்படை தாக்குதல்: மவுனம் கலைத்தார் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 5 March 2019 3:44 PM IST (Updated: 5 March 2019 3:44 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை தாக்குதலில் பயங்கரவாதிகள் பலி எண்ணிக்கை தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனம் கலைத்துள்ளார்.

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 250-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் விமானப்படையின் தரப்பில் எந்தஒரு எண்ணிக்கையும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பா.ஜனதாவின் தரப்பில் பயங்கரவாதிகள் பலி எண்ணிக்கை தொடர்பாக பல்வேறு தகவல் பரப்பப்படுகிறது. இந்நிலையில் எண்ணிக்கை தொடர்பாக  ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் மவுனம் கலைத்துள்ளார். 

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோக்லே வெளியிட்டுள்ள அறிவிப்பிலே அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். “இது ராணுவ நடவடிக்கை கிடையாது” இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை குறிப்பிட்டு நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். 

Next Story