‘பணம் தருகிறேன், எனக்கு ஓட்டுப்போடுங்கள்’ - மராட்டிய பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை


‘பணம் தருகிறேன், எனக்கு ஓட்டுப்போடுங்கள்’ - மராட்டிய பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 6 March 2019 3:15 AM IST (Updated: 6 March 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

பணம் தருகிறேன், எனக்கு ஓட்டுப்போடுங்கள் என மராட்டிய பா.ஜனதா தலைவர் பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில பா.ஜனதா தலைவராக இருப்பவர் ராவ்சாகேப் தன்வே. ஜல்னா நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான அவர், அந்த தொகுதியில் 1999-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அவர் ஜல்னா தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் அந்த தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராவ்சாகேப் தன்வே தொண்டர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடிக்கு எதிராக திருடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உள்ளனர். எனக்கு எதிராகவும் கூட்டம் சேர்ந்து உள்ளனர். அவர்களை நீங்கள் தோற்கடிக்க வேண்டும்.

தேர்தலில் எனக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள். நான் உங்களுக்கு பணம் தருகிறேன். எனது எதிரிகளிடம் பணம் இல்லை. நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பீர்களா?. இவ்வாறு அவர் பேசினார்.

அவரது இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story