டெல்லியில் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


டெல்லியில்  அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 6 March 2019 10:12 AM IST (Updated: 6 March 2019 10:12 AM IST)
t-max-icont-min-icon

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள சிஓஜி வளாகத்தில் பண்டிட் தீன் தயாள் அந்த்யோத்யா பவன் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கட்டிடத்தின் 5-வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  

சமூக நீதித்துறை அமைச்சக அலுவலகம் அமைந்துள்ள இந்த தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 24 வாகனங்களில் விரைந்து வந்து தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.  தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கட்டிடத்தை குளிர்விக்கும் பணி நடைபெற்று வருகிறது.  


Next Story