பாகிஸ்தானில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது: சேட்டிலைட் புகைப்படம் அரசிடம் சமர்ப்பிப்பு - விமானப்படை
பாகிஸ்தானில் துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான சேட்டிலைட் புகைப்படம் அரசிடம் சமர்பிக்கப்பட்டது என விமானப்படை தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் தாக்குதலில் பாலக்கோடு பயங்கரவாத முகாம் தகர்க்கப்பட்டதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. சர்வதேச மீடியாக்களால் முகாம் உள்ள பகுதிக்கு செல்ல முடியவில்லை. ஆனால் சேதம் தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றன. ஜெய்ஷ் மதப்பள்ளியில் எந்தஒரு சேதமும் ஏற்படவில்லை என்றே சேட்டிலைட் புகைப்படம் காட்டுகிறது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இந்திய விமானப்படை தரப்பு தகவல்கள் இதனை நிராகரிக்கும் வகையில் 80 சதவிகித குண்டுகள் சரியாக இலக்கை தாக்கியது. இதுதொடர்பான ஆவணங்கள் மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மிகவும் துல்லியமான 12 சேட்டிலைட் புகைப்படங்களை இந்திய விமானப்படை அரசிடம் ஆவணங்களுடன் சமர்பித்துள்ளது. இந்திய விமானப்படை வீசிய குண்டுகளில் 80 சதவீதம் இலக்கை துல்லியமாக தாக்கியது. கட்டிடத்தின் மேற்பகுதியை துளைத்துக்கொண்டு உள்ளே வெடித்தது, சேதத்தை ஏற்படுத்தியது எனவும் ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விமானப்படை தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story