10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் -தேவேகவுடா
10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவேகவுடா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தலுக்காக கர்நாடகாவில் தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்பட்டது. அதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய தேவேகவுடா,
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தோம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனையில் உடன்பாடு எட்டப்பட்டது.
Related Tags :
Next Story