கேரளாவில் 10ம் வகுப்பு உயிரியல் புத்தகங்களில் கள்ளக்காதலால் எச்.ஐ.வி. பரவும் என சர்ச்சையான தகவல்


கேரளாவில் 10ம் வகுப்பு உயிரியல் புத்தகங்களில் கள்ளக்காதலால் எச்.ஐ.வி. பரவும் என சர்ச்சையான தகவல்
x
தினத்தந்தி 6 March 2019 7:04 PM IST (Updated: 6 March 2019 7:04 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 10ம் வகுப்பு உயிரியல் புத்தகங்களில் கள்ளக்காதலால் ஆட்கொல்லியான எச்.ஐ.வி. பரவும் என்ற சர்ச்சையான தகவல் இடம்பெற்று உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள பள்ளி கூடங்களில் 10ம் வகுப்பு உயிரியல் புத்தகத்தில் வியாதிகளை விரட்டுவது என்ற தலைப்பில், எச்.ஐ.வி. எந்த வழிகளில் பரவும்? என்ற கேள்விக்கு திருமணத்திற்கு முன்/கள்ளக்காதல் ஆகியவற்றின் பாலியல் உறவு வழியே எச்.ஐ.வி. பரவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புத்தகங்கள் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து பள்ளி கூடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் பள்ளி ஆசிரியர்களோ அல்லது நிர்வாகத்தினரோ இந்த தவறை சுட்டி காட்டவில்லை.  சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இதனை சிலர் பதிவேற்றம் செய்த பின்பே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  இதற்கு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து வருகிற கல்வியாண்டில் இருந்து இந்த தகவல் நீக்கப்பட்டு புத்தகங்கள் மாணவர்களிடம் வழங்கப்படும் என கேரள கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர் ஜே. பிரசாத் தெரிவித்து உள்ளார்.

Next Story