அயோத்தி விவகாரம்; மத்தியஸ்தம் மட்டுமே ஒரேவழி - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


அயோத்தி விவகாரம்; மத்தியஸ்தம் மட்டுமே ஒரேவழி - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
x
தினத்தந்தி 8 March 2019 3:08 PM IST (Updated: 8 March 2019 3:08 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் தேசத்திற்கு நன்மையாக அமையும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார்.



அயோத்தி விவகாரத்தை சமரசமாக தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுகிறார்கள். ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்கனவே இவ்விவகாரத்தில் பலதரப்பை சந்தித்து அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள அதிகாரப்பூர்வமற்ற பேச்சு வார்த்தையை மேற்கொண்டார். இப்போது அவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தொடர்பாக அவர் பேசுகையில், “இதுதொடர்பான செய்தியை பார்த்தேன், இது தேசத்திற்கு நன்மை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நினைக்கிறேன், மத்தியஸ்தம் மட்டுமே ஒரே வழி,” என கூறியுள்ளார். 

முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், “என்னுடைய தலைமையில் மத்தியஸ்த குழுவை நீதிமன்றம் நியமனம் செய்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். நீதிமன்ற உத்தரவு இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம்,” என கூறியுள்ளார்.

வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு பேசுகையில்,  “உச்சநீதிமன்றத்தால் எனக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, என்னுடைய சிறப்பான பணியை செய்வேன்,” என்றார். 

Next Story