ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25-ம் தேதி வரை தடை நீட்டிப்பு


ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25-ம் தேதி வரை தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 8 March 2019 6:19 PM IST (Updated: 8 March 2019 6:19 PM IST)
t-max-icont-min-icon

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25-ம் தேதி வரை தடை நீட்டிப்பு செய்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடியை ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்தது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் ப.சிதம்பரம் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும் இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் சொந்த நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மார்ச் 25-ம் தேதி வரை தடை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.

Next Story