இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5-வது ராணுவ வீரரின் உடல் மீட்பு
இமாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5வது ராணுவ வீரரின் உடலை இந்திய ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
சிம்லா,
இமாச்சலப் பிரதேசம் கின்னாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஷிப்கலா என்ற இடத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. ரோந்துப் பணியில் இருந்த 6 ராணுவத்தினர் உள்பட 7 பேர் பனிச்சரிவில் சிக்கினர். இவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்நிலையில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 5வது ராணுவ வீரரின் உடல் 18 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. நாம்கியாவில் கடந்த பிப்.20ல் நிகழ்ந்த பனிச்சரிவில் 6 வீரர்கள் சிக்கிய நிலையில் ஏற்கனவே 4 பேரின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story