5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜ்நாத் சிங் தகவல்


5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டது - ராஜ்நாத் சிங் தகவல்
x
தினத்தந்தி 9 March 2019 10:37 PM IST (Updated: 9 March 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளில் 3 முறை எல்லை தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #KarnatakaRally

மங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி  ராஜ்நாத் சிங் இன்று பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாம் 3 முறை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறோம். நான் 2 தாக்குதல் குறித்த விவரங்களை சொல்கிறேன். முதலாவது உரி முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தினோம்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் 3-வது தாக்குதல் எப்படி நடந்தது என்பதை நான் சொல்ல மாட்டேன். இந்தியா பலவீனமானது என்று எந்தவொரு நாடும் எண்ணிக் கொள்ள வேண்டாம். தற்போது பொருளாதாரத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2028-ல் அமெரிக்கா, ரஷியா அல்லது சீனாவை முந்தி உலகின் வலிமையான 3 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெறும்” என்று தெரிவித்தார்.


Next Story