2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் போட்டி இல்லை - மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் முடிவு


2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் போட்டி இல்லை - மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் முடிவு
x
தினத்தந்தி 10 March 2019 2:45 AM IST (Updated: 10 March 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் போட்டி இல்லை என மேற்கு வங்காளத்தில் இடதுசாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ள இடதுசாரி முன்னணியினர், அந்த கட்சிகளுக்கு எதிராக வாக்குகளை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 4 தொகுதிகளில் போட்டியில்லை என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த தகவலை வெளியிட்ட இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ், பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் மாநிலத்தின் ராய்கஞ்ச் மற்றும் முர்சிதாபாத் தொகுதிகளுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

Next Story