இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு பதில் கேள்வியை எழுப்ப சுஷ்மா யோசனை


இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு பதில் கேள்வியை எழுப்ப சுஷ்மா யோசனை
x
தினத்தந்தி 10 March 2019 4:53 PM IST (Updated: 10 March 2019 4:53 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு பதில் கேள்வியை எழுப்ப சுஷ்மா சுவராஜ் யோசனை வழங்கியுள்ளார்.

புல்வாமா தாக்குதல், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல் நிலவுகிறது. இந்தியப்படைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையுள்ளது என காங்கிரஸ் கூறியது.

இதற்கிடையே இந்திய விமானப்படையின் தாக்குதலில் ஜெய்ஷ் மதப்பள்ளியின் கட்டிடத்திற்கு பெரும் சேதம் எதுவும் கிடையாது என தகவல் வெளியாகியது. இந்திய விமானப்படை எங்களுடைய தாக்குதலில் இலக்கு தகர்க்கப்பட்டது, பயங்கரவாதிகள் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. அதுதொடர்பாக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என கூறிவிட்டது. 

பிரதமர் மோடி நேற்று பேசுகையில், “விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார்களே, நரம்புகளில் இந்திய ரத்தம் பாய்ந்தால் படையினர் மீது சந்தேகப்படுவார்களா?” பாரத மாதாவுக்கு ஜே என்று சொல்கிறவர்கள் சந்தேகப்படுவார்களா? இவர்கள் யார்? அவர்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பதா, வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என்று ஆவேசமாக பேசினார். பாகிஸ்தானில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் வரிசையாக பேசிவருகிறார்கள். 

இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு பதில் கேள்வியை எழுப்ப சுஷ்மா சுவராஜ் யோசனை வழங்கியுள்ளார். ஆதாரம் கேட்பவர்களிடம் இந்திய விமானப்படை பயங்கரவாதிகளை அழிக்க சென்றாதா? இல்லை அந்த நாட்டிலிருந்து பயங்கரவாதிகளிடன் சடலத்தை எடுத்துவரச்சென்றதா? என கேள்வியை கேழுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story