இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன - ஜனாதிபதி வழங்குகிறார்


இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன - ஜனாதிபதி வழங்குகிறார்
x
தினத்தந்தி 11 March 2019 12:45 AM IST (Updated: 11 March 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று ஜனாதிபதி வழங்குகிறார்.

புதுடெல்லி,

பல்வேறு துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதில் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என மொத்தம் 112 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இவர்களில் முதல் கட்டமாக 56 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) விருது வழங்கப்படுகிறது. ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இன்று நடைபெறும் விழாவில் விருது பெறுவோரில் மறைந்த நடிகர் காதர் கான், நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா, அகாலிதளம் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா, மறைந்த பத்திரிகையாளர் குல்தீப் நயார் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.

Next Story