கேரளா பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
கேரளா பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநில தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராம் மீனா பேசுகையில், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து மத பிரசாரத்தை தூண்டுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும். தேர்தல் பிரசாரத்திற்காக இவ்விவகாரத்தை அரசியல் கட்சிகள் எழுப்பக்கூடாது என எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“இவ்விவகாரம் தொடர்பாக நாளை அரசியல் கட்சிகளிடம் பேச உள்ளேன். வாக்குகளைப் பெற மத உணர்வு அல்லது மத பாரம்பரியங்களை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்வேன், இது மக்களிடையே சில மதபதட்டங்களை ஏற்படுத்தும். இது நடந்தால் பொறுப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story