நாடாளுமன்ற தேர்தல்: உயரமான வாக்குச்சாவடி


நாடாளுமன்ற தேர்தல்: உயரமான வாக்குச்சாவடி
x
தினத்தந்தி 12 March 2019 1:45 AM IST (Updated: 12 March 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

இமாசலபிரதேச மாநில வாக்குச்சாடிதான் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் உயரமான வாக்குச்சாவடியாகும்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் லகால் ஸ்பிடி மாவட்டம் ஹிக்கிம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள ஒரு வாக்குச்சாடிதான், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் உயரமான வாக்குச்சாவடி ஆகும். அந்த கிராமம், கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 567 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு 196 வாக்காளர்கள் உள்ளனர்.

பஞ்சார் மாவட்டம் சக்தி கிராமத்தில் வெறும் 86 வாக்காளர்கள்தான் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 20 கி.மீ. தூரத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. இதுதான் அம்மாநிலத்தின் மிக தூரமான வாக்குச்சாவடி ஆகும்.

உனா தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி அதிக வாக்காளர் களை கொண்டதாகவும் (1,359 பேர்), லகால் ஸ்பிடி மாவட்டம் லிங்கரில் ஒரு வாக்குச்சாவடி குறைவான வாக்காளர்களை (37 பேர்) கொண்டதாகவும் உள்ளன.


Next Story