தேசிய செய்திகள்

தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல் + "||" + "Why Act Frivolously?" Sena's Swipe At BJP's Manoj Tiwari Over Army Jacket

தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்

தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ பா.ஜனதா மீது சிவசேனா பாய்ச்சல்
தேசபக்தி என்பது தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல’ என பாரதீய ஜனதாவை சிவசேனா சாடியுள்ளது.
மும்பை, 

புலவாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தது. 

இந்த தாக்குதலில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தாக்குதலின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. பா.ஜனதா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயரை பயன்படுத்தி சிலர் வாக்கு கேட்பது ராணுவத்தினரின் தியாகத்தை அரசியலாக்கும் செயலாகும். எதிர்க்கட்சிகளை தேச விரோதி என்று அழைப்பதும் முறையாகாது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தேசபக்தி என்பது எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல.

புலவாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட பதிலடி தாக்குதல் ராணுவத்தின் கடமை. ஆனால் அரசியல்வாதிகள் அதற்கு உரிமை கோரி வருகிறார்கள். ராணுவத்தின் வெற்றியை தங்களின் வெற்றியாக நினைத்து சிலர் பதாகை வைத்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் விளம்பரம் தேடுகிறார்கள். இது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றி என அவர்கள் நினைக்கவில்லை.

பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் ராணுவ உடை அணிந்து பிரசாரம் செய்கிறார்கள். இதனால் தான் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இதேநேரத்தில் புலவாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவதும், வீரர்களின் வீரத்தை சந்தேகிப்பதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெண்கள் ஓட்டுகளை கவர சிவசேனா பிரசார இயக்கம்
மராட்டிய மாநிலத்தில் பெண்கள் ஓட்டுகளை கவர சிவசேனா பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கி உள்ளது.
2. உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்
உன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
3. ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் பிரதமர் மோடி, அமித் ஷா நாளை ஆலோசனை
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ஆகியோர், ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.
4. மின்கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து மின்துறை தலைமை அலுவலகம் முன்பு மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்.
5. மோடி மீண்டும் பிரதமர் என்றால் வாக்குப்பதிவு எந்திரம் மீது நம்பிக்கை இல்லையா? எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா தாக்கு
நீங்கள் வெற்றிபெற்ற போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நன்றாக இருந்தது. மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார் என்றதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.