எந்த மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது - மாயாவதி திட்டவட்டம்
எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று மாயாவதி திட்டவட்டமாக கூறினார்.
புதுடெல்லி,
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன. இந்த கூட்டணி அண்டைய மாநிலமான மத்திய பிரதேசத்திற்கும் நீண்டுள்ளது. காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது. இந்நிலையில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று மாயாவதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் மத்தியில் பேசிய மாயாவதி, நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளாது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளேன் என்றால் அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் அடிப்படையில் அமைந்தது ஆகும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியானது, பாரதீய ஜனதாவை தோற்கடிப்பதற்கு சரியான கூட்டணி ஆகும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அந்த கட்சியை தோற்கடிப்போம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story