வாக்குப்பதிவை அதிகரிக்க ஊக்கப்படுத்துங்கள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்


வாக்குப்பதிவை அதிகரிக்க ஊக்கப்படுத்துங்கள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 March 2019 11:12 AM IST (Updated: 14 March 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவை அதிகரிக்க ஊக்கப்படுத்துங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது எனவும், தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என இரண்டுமே ஒரே கட்டமாக ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில்,  வரும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க ஊக்கப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்குமார், மாயாவதி, அகிலேஷ்யாதவ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story