மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு


மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 14 March 2019 1:41 AM IST (Updated: 14 March 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

மங்களூரு,

கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் மால்பே துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமாகினர். இது குறித்து தகவல் அறிந்த கடற்படை, கடலோர காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் சுமார் 3 மாதங்களாக பெருத்த சோகத்தில் இருக்கும் அந்த மீனவர்களின் குடும்பத்தினர், கடலில் மாயமான தங்கள் அன்புக்குரியவர் களை கண்டுபிடிக்க தவறியதாக மத்திய-மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என அவர்கள் முடிவு செய்துள்ளனர். மாயமான மீனவர்களின் சொந்த தொகுதியான உடுப்பி-சிக்கமகளூருவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Next Story