அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை ஒப்படையுங்கள்: இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால்
அமைதியை விரும்புகிறீர்கள் என்றால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் என்று இம்ரான் கானுக்கு சுஷ்மா சுவராஜ் சவால் விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: பாகிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் இல்லாத நாடாக மாற்றினால் அந்நாட்டுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தவும், சுமூகமான சூழலை உருவாக்கிக் கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். ஆனால், பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை சாத்தியம்.
இம்ரான்கான் பெருந்தன்மையானவர், அமைதியை விரும்புகிறவர் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையிலேயே அவர் அமைதியை விரும்புகிறவராக இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் இம்ரான் கான் ஒப்படைக்கட்டும். அவர் எவ்வளவு பெருந்தன்மையானவர் என்பது இதில் தெரிந்து விடும்” என்றார்.
Related Tags :
Next Story