மண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு - நிகில் குமாரசாமியின் வெற்றிக்கு சிக்கல்?
மண்டியா தொகுதியில் நடிகை சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளதால், நிகில் குமாரசாமியின் வெற்றிக்கு சிக்கல் ஏற்படுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு உள்ளது. இந்த 2 கட்சிகளும் இணைந்து ஒன்றுபட்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இதற்கிடையே மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில், தனக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்று நடிகை சுமலதா அம்பரீஷ் வலியுறுத்தினார். இதை ஏற்கனவே சித்தராமையா நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் நடிகை சுமலதா சுயேச்சையாக களம் இறங்க முடிவு செய்துள்ளார். மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் சுமலதாவுக்கு ஆதரவு அளிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கணவர் அம்பரீஷ் மரணம் அடைந்ததால், சுமலதா மீது மண்டியா மக்களுக்கு அனுதாபம் உள்ளது. இதனால் அவருக்கு பா.ஜனதா ஓட்டுகள், காங்கிரஸ் அதிருப்தி ஓட்டுகள் மற்றும் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதனால் நிகில் குமாரசாமியின் வெற்றிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Tags :
Next Story