எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்


எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் பிரம்மாண்ட   பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்
x
தினத்தந்தி 15 March 2019 10:17 AM IST (Updated: 15 March 2019 10:17 AM IST)
t-max-icont-min-icon

எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படையினர் நேற்று பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படை  நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில்  ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன. 

இந்த பயிற்சியில், அதிக வேகத்தில் விமானங்கள் பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டார தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலைக்காக இந்த பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றதாக தெரிகிறது. 

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு, இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story