பாகிஸ்தான் ராணுவ பிடியில் இருந்து மீண்ட அபிநந்தனுக்கு சிகிச்சை முடிந்தது பணியில் சேருவது எப்போது?
பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட அபிநந்தனுக்கு சிகிச்சை முடிந்தது. அவர் பணியில் சேருவது எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தான் விமானத்துக்கு எதிரான பதிலடி நடவடிக்கையின்போது, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். 60 மணி நேரத்துக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பதற்றத்தை தணித்து மனஅமைதி அளிக்கும் பணியும் நடந்தது.
இந்நிலையில், அவருக்கு 2 வாரமாக நடந்த மனஅமைதி ஏற்படுத்தும் பணியும், சிகிச்சையும் முடிவடைந்து விட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் 3 வாரம் மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார். அதன்பிறகு பணியில் சேருவார்.
மேலும், விமானப்படை அமைக்கும் மருத்துவ குழு, அபிநந்தனின் உடல் தகுதியை பரிசோதிக்கும். அதன் அடிப்படையில், அபிநந்தன் விருப்பப்படி, அவரை போர் விமானத்தை ஓட்ட அனுமதிப்பது பற்றி விமானப்படை முடிவு செய்யும்.
Related Tags :
Next Story