முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம்


முதல் முறையாக ஓட்டுப்போடும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம்
x
தினத்தந்தி 16 March 2019 4:45 AM IST (Updated: 16 March 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கையில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப்போட இருக்கும் இளம் வாக்காளர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடம் பெற்று உள்ளது. அந்த மாநிலத்தில் 20.10 லட்சம் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற இருக்கின்றனர். அடுத்ததாக உத்தரபிரதேசம் (16.70 லட்சம்), மத்திய பிரதேசம் (13.60 லட்சம்) மாநிலங்கள் அதிக இளம் வாக்காளர்களை கொண்டிருக்கின்றன.

இதைப்போல ராஜஸ்தான் (12.80 லட்சம்), மராட்டியம் (11.90 லட்சம்), தமிழ்நாடு (8.90 லட்சம்), ஆந்திரா (5.30 லட்சம்) ஆகிய மாநிலங்களும் கணிசமான முதல் முறை வாக்காளர்களை பெற்றிருக்கின்றன. டெல்லியில் முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 97,684 என தேர்தல் கமிஷனின் பட்டியல் கூறுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 8.40 கோடி அதிகரித்து இருப்பதாக கூறியுள்ள தேர்தல் கமிஷன், இதில் 1.50 கோடி பேர் 18 முதல் 19 வரையிலான வயதை உடையவர்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 1.66 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story