அசாமில் பாஜக எம்.பி ராம் பிரசாத் சர்மா அக்கட்சியில் இருந்து திடீர் விலகல்
அசாமில் பாஜக எம்.பி ராம் பிரசாத் சர்மா திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் திஸ்பூர் பாஜக எம்.பி ஆன ராம் பிரசாத் சர்மா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் ராம் பிரசாத் சர்மா பெயர் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. அசாம் மாநில மந்திரியும், நீடா அமைப்பாளருமான பிஸ்வா சர்மாவின் பெயர் மட்டுமே இருந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து ராம் பிரசாத் சர்மா கூறுகையில்,
பெயர் பட்டியலும் டெல்லிக்கு சென்று அனுமதி அளிக்கப்பட்டு தேர்தல் பணிகள் துவங்கி விட்டது. இது தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானம். இதனால் தான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். இதுவரை என் மீது அக்கறையும், அன்பையும் செலுத்தி ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களுடன் இந்த தொகுதியிலேயே தான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story