டெல்லியில் பாஜக தேர்தல் கமிட்டி ஆலோசனை: நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார்?


டெல்லியில் பாஜக தேர்தல் கமிட்டி ஆலோசனை: நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார்?
x
தினத்தந்தி 16 March 2019 2:39 PM GMT (Updated: 16 March 2019 2:39 PM GMT)

டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுக்க மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி வரை வாக்கு பதிவுகள் நடைபெற உள்ள நிலையில், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு முதல் கட்டமாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

2019 மக்களவை தேர்தலில் நான் லக்னோவில் போட்டியிடுகிறேன்.  நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story