ஆந்திர சட்டசபை தேர்தலில் ருசிகரம்: ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவல்
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு தாவினார்.
அமராவதி,
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட சட்டசபைக்கும் அடுத்த மாதம் 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்குதேசம் கட்சி, ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. அதே நேரத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வரிந்து கட்டுகிறது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலுக்கான தெலுங்குதேசம் வேட்பாளர் பட்டியலை முதல்-மந்திரியும், கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். இந்த பட்டியலில் முன்னாள் மந்திரி ஆடல பிரபாகர் ரெட்டி, நெல்லூர் (ஊரகம்) தொகுதி வேட்பாளராக இடம் பெற்றிருந்தார்.
ஆனால் அவரை வியாழக்கிழமை இரவில் இருந்து யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவப்போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இது, அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், மறைந்த முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரருமான முன்னாள் மந்திரி ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டி படுகொலையால் தாமதமானது.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் ஆடல பிரபாகர் ரெட்டி, நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்தார். இது தெலுங்குதேசம் கட்சிக்கு கடும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கிடைக்காததால் ஒருவர் கட்சி மாறுவது இயல்பு. ஆனால் ‘சீட்’ கிடைத்தும் ஒருவர் கட்சி மாறி இருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலம் பெற்று வருவதும், ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதும், இந்த கட்சி தாவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கிழக்கு கோதாவரி மாவட்டம், ராமச்சந்திராபுரம் தொகுதி தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் தோட்டா திரிமூர்த்துலுவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடப்பு சட்டசபை உறுப்பினரான இவருக்கு மீண்டும் போட்டியிட சந்திரபாபு நாயுடு வாய்ப்பு வழங்கி உள்ளார்.
இன்னொரு பக்கம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவிய கர்நூல் எம்.பி. ஆன புட்டா ரேணுகா, மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புகிறார்.
ஆந்திராவில் இருந்து பிரிந்து உதயமான தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களில் 6 பேர் ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டீர சமிதிக்கு தாவினர். மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளுங்கட்சிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே 17 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள தெலுங்கானாவில் 8 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Related Tags :
Next Story