மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் கிடையாது அகிலேசுக்கு முலாயம் சிங் மிரட்டல்


மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் கிடையாது அகிலேசுக்கு முலாயம் சிங் மிரட்டல்
x
தினத்தந்தி 17 March 2019 10:52 AM GMT (Updated: 17 March 2019 10:52 AM GMT)

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் கிடையாது என அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் மிரட்டியுள்ளார்.

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் கிடையாது என அகிலேஷ் யாதவை முலாயம் சிங் யாதவ் மிரட்டியுள்ளார்.

முலாயம் சிங்கின் இளைய மகன் பிரத்தீக் சிங் யாதவ் மனைவி அபர்ணா பிஷ்த் யாதவ்(29) 2017 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது அவர் சமாஜ்வாடி கட்சியின் தரப்பில் சம்பல் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக முலாயம் சிங் யாதவ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று அபர்ணா கூறிவிட்டார். கட்சி இப்போது அகிலேஷ் யாதவ் வசம் உள்ளது.

அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் ஏற்கனவே இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இப்போது மூன்றாவது முறையாக கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். இப்போதைய தேர்தலில் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்கள். குடும்ப உறுப்பினர்களே அதிக தொகுதியில் களமிறங்குகிறர்கள் என விமர்சனம் எழுகிறது. இந்நிலையில் அபர்ணா யாதவிற்கும் சீட் வேண்டும் என்று அகிலேஷ் யாதவிடம், முலாயம் சிங் வலியுறுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

மருமகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால் பிரசாரம் செய்ய மாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2017 தேர்தலில் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே சமாஜ்வாடி, பா.ஜனதாவிடம் ஆட்சியை இழந்தது. முலாயம் சிங் யாதவ் பிரசாரம் செய்யவில்லை என்றால் வெற்றியில் பாதிப்பு நேரிடலாம் என கணிக்கப்படுகிறது. எனவே அபர்ணாவிற்கு சீட் கொடுப்பது தொடர்பாக அகிலேஷ் யோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு நகர்வை பா.ஜனதா உன்னிப்பாக கவனிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story