உ.பி: 7 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது மாநில காங்.தலைவர் அறிவிப்பு


உ.பி: 7 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது மாநில காங்.தலைவர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2019 4:57 PM IST (Updated: 17 March 2019 4:57 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் 7 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது என்று மாநில காங்.தலைவர் ராஜ்பாப்பர் அறிவித்துள்ளார்.

லக்னோ,

மாநில காங்.தலைவர் ராஜ்பாப்பர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய லோக் தள கட்சிகளுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடாது.  

மாயாவதி, அஜித்சிங், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்களுக்காக 7 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியில்லை எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பகுஜன்சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் இதனை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story