கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்


கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்
x
தினத்தந்தி 17 March 2019 8:24 PM IST (Updated: 17 March 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார். அவருக்கு வயது 63.


கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் அவதிப்பட்டார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருடைய உடல் நிலை இன்று மிகவும் மோசமானதாக தெரிவிக்கப்பட்டது. அவருடைய உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராகவும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.  கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உயிரிழப்பு செய்தி மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. பொது வாழ்வில் ஒருமைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு கொண்டவர்,  கோவா மற்றும் இந்தியாவின் மக்களுக்கு அவருடைய சேவை மறக்கமுடியாதது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Next Story