2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் - கருத்துக்கணிப்பு
2019 தேர்தலில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் எனவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 135 தொகுதிகள் கிடைக்கும் எனவும் மற்றவை 125 இடங்களை கைப்பற்றும் எனவும் டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் 80 தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில் பா.ஜனதா 42 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி 36 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தில் பா.ஜனதா கூட்டணி 39 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு 27 தொகுதியும், காங்கிரஸ் கூட்டணிக்கு 13 தொகுதியும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story