மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்


மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை இரங்கல்
x
தினத்தந்தி 19 March 2019 3:45 AM IST (Updated: 19 March 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

மனோகர் பாரிக்கர் மறைவுக்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி, 

முன்னாள் ராணுவ மந்திரியும், கோவா முதல்–மந்திரியுமான மனோகர் பாரிக்கர் மறைவையொட்டி நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மனோகர் பாரிக்கருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு தீர்மானமும், நாடு முழுவதும் ஒரு நாள் தேசிய துக்கம் அணுசரிப்பது என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


Next Story