மேற்கு வங்காளத்தில் 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மேற்கு வங்காளத்தில் 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. மத்தியில் எதிர்க்கட்சிகள் வரிசையில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிப்பெற முயற்சி மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க காங்கிரஸ் மத்திய தலைமை விரும்பியது. ஆனால் மாநில தலைமை அதனை விரும்பவில்லை என கூறப்பட்டது. இதற்கிடையே திரிணாமுல் தனியாகவே களமிறங்குகிறது என தெரியவந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியது. இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இன்னும் 4 தொகுதிகள் மட்டுமே மீதம் உள்ளது.
இருப்பினும் காங்கிரசுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளதாக இடதுசாரிகள் முன்னணி சேர்மன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளுமா, இல்லை தனியாக போட்டியிடுமா என்பது விரைவில் தெரியவரும்.
Related Tags :
Next Story