கர்நாடகாவில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி


கர்நாடகாவில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 March 2019 5:57 PM IST (Updated: 19 March 2019 5:57 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் கட்டப்பட்டு வந்த புதிய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகாவின் தார்வாத் மாவட்டத்தில் குமரேஷ்வர் நகரில் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது.  இந்த நிலையில் திடீரென இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

இதில் 2 பேர் பலியாகினர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர்.  40க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.  இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

Next Story